கொரோனா — கோவிட் 19 — முதல் முக்கிய பாடம் — ஊட்டச்சத்து — மிக முக்கியம், கவனிக்கவும்.

Srinivasa K. Rao, Ph.D.
4 min readJun 6, 2020

--

Translated and Facilitated by Dr. Thambi Dorai, New York, USA and Dr. Shakthi Vijayan, Coimbatore, India

Mumbi Stevens-Toye Ph.D. 2018

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் கிருமி மனித இனத்தின் அனைத்து பரிமாணங்களையும் ஆட்டிப்படைத்துவிட்டது. சரித்திரத்தில் இது போன்ற பரவலான பாதிப்பை நம் சமூகம் பார்த்திருக்கவில்லை. நோய் தொற்றின் பயத்தில் கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர். இக்கிருமியின் பலம் என்ன? மரணங்களா ?! மே 6 2020 வரையில் கொரோனா நோய் தொற்றினால் மரணித்தவர்கள் 2,69,867 பேர்கள். 2019 ல் மட்டும் உலக நாடுகள் அனைத்துக்கும் சேர்த்து வழக்கமான காரணங்களால் 6 கோடி மக்கள் இறந்தனர். இருந்த போதும், அரசாங்கங்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பல் தொழில் புரிபவர்களும் இந்த நோயின்மூலம் நிகழும் இறப்புகளை குறைப்பதற்கும் தடுப்பதற்கும் எடுத்த முயற்சியைப் போல் வேறெந்த மருத்துவம் சார்ந்த நிகழ்வுக்கும் முயற்சித்ததில்லை..

நமது குறிக்கோள் மரணத்தைத் தடுப்பதாயின் — மனிதர்களைக் கொல்லும் விஷயங்களில் — தடுக்கக்கூடிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பது யதார்த்தம்.

குறையுள்ள உணவு

மரணத்திற்கு ஒரு பெரிய ஆபத்து காரணி 1990 முதல் 2017 வரையிலான மரண காரணிகளை ஒரு 130 ஆரய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்ததில், ஐந்தில் ஒரு மரணம் ஊட்டச்சத்து குறைபாட்டினாலேயே நிகழ்ந்ததாகக் கண்டுபிடித்தனர். அதாவது ஊட்டச்சத்து குறைபாட்டினால் 2017ல் மட்டும் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், ஊட்டச்சத்து குறைபாட்டினை சரி செய்தால், உலகத்தில் நிகழும் பல மரணங்களை தடுக்கலாம்.

https://www.healtheects.org/announcements/state-global-air-2019-air-pollution-signicant-riskfactor-worldwide

மனித உடல் — உயர்தனிப் பெரும் சிறப்பு வாய்ந்த மூலக்கூறு(molecules) தொழிற்சாலை

மனித உடல் ஒரு உயர்தனிப் பெரும் சிறப்பு வாய்ந்த மூலக்கூறு(molecules) தொழிற்சாலை. அதன் முதன்மை செயல்பாடு ஒரே ஒரு பொருளை மட்டுமே உற்பத்தி செய்வது — சக்தி / ஆற்றல். இது உணவை மூலப்பொருளாக எடுத்து அதை மூலக்கூறுகளாக ஜீரணிக்கிறது. மனித வளர்சிதை மாற்ற தரவுத்தளத்தின்படி, மனித உடலில் 1,000,000 மூலக்கூறுகள் செயல்படுகின்றன. டைனமிக் மூலக்கூறு செயல்பாட்டில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் நோய் நிலை ஏற்படும். அது சுலபமாக நல்ல உணவின் மூலம் சாதாரண நல்ல நிலைக்கு கொண்டுவர இயலும். ஆகையால், உணவு இன்மை முதன்மை ஆபத்து காரணி அல்லது மரணத்திற்கான காரணியாக இருக்கும்போது, ​​நாம் அதில் கவனம் செலுத்தி எளிதில் தவிர்க்கக்கூடிய இறப்புகளைக் குறைக்க முடியும்.

Physiol Rev. 2019 Oct 1;99(4):1819–1875. doi: 10.1152/physrev.00035.2018.

மனித உடலுக்கு உணவில் இருந்து சுமார் 150 ஊட்டச்சத்துக்கள் தேவை. பெரு நுண்ணூட்டச் சத்துக்கள்(macronutrients), மாவுச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் பெரிய அளவிலும் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்(micronutrients), வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சிறிய அளவில் தேவைப்படுகின்றன. மனித உடலுக்குத் தேவையான 13 அத்தியாவசிய வைட்டமின்கள் வைட்டமின்கள் ஏ, சி, டி, ஈ, கே மற்றும் பி வைட்டமின்கள்: தியாமின் (பி 1), ரைபோஃப்ளேவின் (பி 2), நியாசின் (பி 3), பாந்தோத்தேனிக் அமிலம் (பி 5), பிரிடாக்ஸிடின் (பி 6) , பயோட்டின் (பி 7), ஃபோலேட் (பி 9) மற்றும் கோபாலமின் (பி 12). உடலுக்குத் தேவையான 16 அத்தியாவசிய தாதுக்கள் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்பர், சோடியம், குளோரைடு, மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, அயோடின் மற்றும் செலினியம், மாலிப்டினம், குரோமியம் மற்றும் ஃபுளூரைடு.

ஒரு வளர்சிதை மாற்ற செயல்முறை ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளால் பாதிக்கப்படும்போது, ​​குறைந்தபட்சமாக கிடைக்கும் ஊட்டச்சத்தை பொறுத்தே பிற இயக்கங்கள் நிகழும். எனவே ஒரு நபரின் ஆரோக்கியம் மற்ற ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு அதிகமாக வழங்கப்பட்டாலும், மிகக் குறைந்த செறிவில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே அனைத்து ஊட்டச்சத்துக்களும் மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உடலுக்கு ஒரு சீரான / உகந்த அளவில் கிடைக்க வேண்டும்.

உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாடு

சுமார் 200 கோடி மக்கள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான உணவை உட்கொள்வதில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மோசமான உணவுப் பழக்கம் நீண்டகால நோய்களுடன் தொடர்புடையது. மனித ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விஞ்ஞான ஆராய்ச்சி மனித உணவின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சிகளின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.

போதுமான மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதிகப்படியான மக்ரோனூட்ரியன்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் ஏற்றத்தாழ்வு ஆகியவை உடல் பருமனை ஏற்படுத்துகின்றன. மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களில் மேலும் ஏற்றத்தாழ்வு நீரிழிவு மற்றும் உடலின் பிற ஆரோக்கியமற்ற நிலைகளை ஏற்படுத்துகிறது.

https://geographical.co.uk/places/mapping/item/3599-the-global-burden-of-malnutrition-fromundernourishment-to-obesity

உணவு பன்முகத்தன்மை

பலவிதமான உணவுகள், ஆரோக்கியமான மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் கொடுக்க முடியும். ஆனால் ரோம் நகரத்தைத் தளமாகக் கொண்ட பல்லுயிர் சர்வதேசம் (Biodiversity International) என்னும் நிறுவனத்தின் கூற்றுப்படி, தற்போது உலகளவில் 6,000 உணவுத்தாவரங்கள் பயனுள்ளதாக இருப்பினும், 200 க்கும் குறைவான தாவரங்களே வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றன. மேலும், வருத்தமளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால் 5 வகை, அதாவது — அரிசி, கோதுமை, மக்காச்சோளம், தினை மற்றும் சோளம் ஆகியவை மட்டுமே அதிகம் பயிராகுகின்றன. அதாவது மனித ஆற்றல் விநியோகத்தில் 60% இவை ஐந்து மட்டுமே. தலைமுறைக்குப் பின் தலைமுறையாக, நாம் நமது உணவுப் பன்முகத்தன்மை பட்டியலை சுருக்கிக்கொண்டே வருகிறோம். இதனால் தேவையான ஊட்டச்சத்துக்கள் மனித உணவில் இல்லை. உணவு பன்முகத்தன்மை இல்லாததால் தேவையான ஊட்டச்சத்துக்களை இழப்பது நாள்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது. உணவு என்பது கலாச்சார, தனிப்பட்ட மற்றும் மக்களின் நிதி நிலையைப் பொறுத்தது. உணவில் ஒரு பெரிய மாற்றம் செய்வது எளிதான பணி அல்ல. ஆனால் அது காலத்தின் தேவை. ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் புதிய உணவுப் பொருட்களைச் சேர்க்கத் தொடங்குவது முக்கியம்.

FooDB

https://foodb.ca/

FooDB என்பது உணவுப் பொருட்கள், வேதியியல் மற்றும் உயிரியல் பற்றிய உலகின் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான தரவுத்தளமாகும். இது மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் இரண்டையும் பற்றிய தகவல்களை வழங்குகிறது, இதில் உணவுகளுக்கு அவற்றின் சுவை, நிறம், திடம், அமைப்பு மற்றும் நறுமணம் ஆகியவற்றைக் கொடுக்கும் பல கூறுகள் உள்ளன. FOODB தரவுத்தளத்தில் 797 உணவுப் பொருட்கள் உள்ளன. இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்தி, சிறந்த ஆரோக்கியத்திற்காக உங்கள் உணவில் பன்முகத்தன்மையை அதிகரிக்க முயற்சி செய்யலாம்.

இந்த கொரோனா பாதிப்பினால் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை உலகம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

Author contact — tellabillion@gmail.com

--

--

Srinivasa K. Rao, Ph.D.
Srinivasa K. Rao, Ph.D.

Written by Srinivasa K. Rao, Ph.D.

Biomedical Scientist in New York is interested in Nutrition, Metabolomics, Food as Medicine, STEM and AI. https://www.linkedin.com/in/sraonewyrok/

No responses yet